SRCLC:TAM;ENG:GT-TAM 1.0 Наука и Образование
16.07.2026 Читать источник
Zoho представила Zoho Classes 2.0 — платформу с искусственным интеллектом для образования
Индийская технологическая компания Zoho выпустила обновленную версию системы управления обучением, которая использует искусственный интеллект для персонализации образовательного процесса. Новая платформа доступна бесплатно для государственных учебных заведений и школ, а также предлагает расширенные функции для частных вузов и медицинских колледжей.
Перевод ИИ
Текст статьи доступен на языке оригинала.
Нажмите кнопку «Перевести статью» выше, чтобы сгенерировать перевод с помощью ИИ.
Оригинальный контент
ஜோஹோ கிளாசஸ் 2.0! – செயற்கை நுண்ணறிவு பொருந்திய புதிய கற்றல் மேலாண்மை அமைப்பு மென்பொருளை வெளியிட்ட ஜோஹோ
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ, இன்று ஜோஹோ கிளாசஸ் 2.0 எனும் மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் உருவாக்கப்பட்டு, உலகெங்கிலும் உள்ள கல்வி நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) பொருந்திய கல்வித் தள மேலாண்மை அமைப்பு (Learning Management System – LMS) ஆகும். இத்தளம் முதலில் இந்தியாவில் அறிமுகமாகி, அடுத்த சில மாதங்களில் உலகமெங்கும் அந்தந்த பிராந்திய கல்வித் தேவைகளுக்கு ஏற்ப வெளியிடப்படும்.
இந்தியாவில், ஜோஹோ கிளாசஸ் 2.0, அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் எந்த உரிமக் கட்டணமும் இன்றி வழங்கப்படும். 100 மாணவர்கள் வரை கற்பிக்கும் ஆசிரியர்களும் இதை இலவசமாகப் பயன்படுத்தலாம். இது, தொழில்நுட்பத்தின் மூலம் கல்வியை அனைவருக்கும் சென்றடையச் செய்யும் ஜோஹோவின் உறுதிப்பாட்டின் அடிப்படையில் செய்யப்படும் ஒரு முன்னெடுப்பாகும். இந்தத் தளம், சிறந்த விலையிலான சந்தா திட்டங்கள் மூலம், தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் கிடைக்கிறது.
ஜோஹோ கிளாசஸ் 2.0, கற்பித்தல், கற்றல், மாணவர் வெற்றி, மற்றும் கல்வி நிறுவன நிர்வாகத்தை ஒரே ஒருங்கிணைந்த தளத்தில் கொண்டு வருகிறது. இந்தப் புதிய பதிப்பு மூன்று முக்கிய திறன்களை அறிமுகப்படுத்துகிறது: மாணவர்களின் கற்றல் பயணம்
முழுமைக்கும் உடனிருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் தலைமுறை
மாணவர்களை கற்றலில் ஈடுபடுத்த வடிவமைக்கப்பட்ட மென்பொருள் கருவிகள், மற்றும் நிறுவன நுண்ணறிவுடன் கூடிய மாணவர் வாழ்நாள்சுழற்சி மேலாண்மை. இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட இத்தளத்தை, இந்திய அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் பயன்படுத்தலாம். இதன் மூலம், கற்பித்தல், மதிப்பீடு மற்றும் பாடத் திட்ட உள்ளடக்கத்தை மாணவர்கள் தங்கள் சொந்த மொழியிலேயே செயற்கை நுண்ணறிவின் துணையோடு பெற முடியும்.
ஜோஹோவின் தலைமை நிர்வாக அதிகாரி மணி வேம்பு கூறுகையில், ”ஒரு சமூகம் எவ்வாறு கற்கிறது, தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது, மற்றும் வளர்கிறது என்பதை வடிவமைப்பது கல்வியே. எனவே, தொழில்நுட்பம் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மிக முக்கியமான துறைகளில் இதுவும் ஒன்றாகும். ஒவ்வொரு கல்வி முறையும் தனித்துவமானது என்பதால், தொழில்நுட்பமானது பிராந்திய தேவைகள் மற்றும் பன்முக கற்றல் சூழல்களுக்கு ஏற்ப கட்டமைக்கப்பட வேண்டும். இந்த நம்பிக்கையின் அடிப்படையிலே, ஜோஹோ கிளாசஸ் தளம் பன்முகத்தன்மை வாய்ந்த மாணவர்களுக்கும் மற்றும் கல்வி முறைகளுக்கும் ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,”என்றார்.
மேலும் அவர், ”நவீன கல்வி தொழில்நுட்பத்தை அணுகுவது ஒரு நிறுவனத்தின் வளங்களால் மட்டுப்படுத்தப்படக் கூடாது என்பதே எங்கள் நம்பிக்கை. அணுகலை ஜனநாயகமயமாக்கும் எங்கள் இந்த உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, ஜோஹோ கிளாசஸ், இந்தியா முழுவதும் உள்ள மத்திய மற்றும் மாநில அரசு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு எந்த உரிமக் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது. மேலும் பல நிறுவனங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்றல் விளைவுகளை
மேம்படுத்தவும், கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் இது உதவும் என நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.
ஜோஹோவின் தயாரிப்பு மேலாண்மைத் துறை துணைத் தலைவர் தேவ் ஆனந்த் ராமசாமி கூறுகையில், ”பாரம்பரிய LMS தளங்கள் கல்வி உள்ளடக்கத்தை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டவை, அனுபவங்களை வழங்குவதற்காக அல்ல. ஆனால் குறும்பட வீடியோக்கள் மற்றும் உடனடி பின்னூட்டத்துடன் வளர்ந்த இன்றைய மாணவர்கள், கற்றல் ஊடாடும் மற்றும் ஈர்க்கும் விதமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்; பாரம்பரிய முறைகள் இனி அவர்களின் கவனத்தை தக்க வைக்க
முடியவில்லை. அதே நேரத்தில், ஆசிரியர்களின் பணிச்சுமையை அதிகரிக்காமல் நிறுவனங்கள் விளைவுகளை மேம்படுத்த வேண்டும். அந்த இடைவெளியை நிரப்பவே நாங்கள் இதைச் செய்தோம். ஜோஹோ கிளாசஸ் 2.0-இல் ஆழமாக இணைக்கப்பட்ட AI அடுக்கு, பாடத் திட்டமிடல், மதிப்பீடு, அறிக்கையிடல் போன்ற நேரத்தை எடுத்துக்கொள்ளும் பணிகளை தானாகவே செய்கிறது, இதனால் ஆசிரியர்கள் மிக முக்கியமான விஷயத்தில் கவனம் செலுத்த முடியும் — கற்பித்தல் மற்றும் மாணவர்களுடன் ஈடுபடுதல்” என்றார்.
கற்பித்தல், கற்றல் மற்றும் மாணவர் வெற்றியில் மாற்றம்
ஜோஹோ கிளாசஸ் 2.0 தளம், செயற்கை நுண்ணறிவு (AI), மாணவர் ஈடுபாடு, மாணவர் வாழ்நாள்சுழற்சி மேலாண்மை, மற்றும் நிறுவன நுண்ணறிவு (institutional intelligence) ஆகியவற்றை ஒரே ஒருங்கிணைந்த தளத்தில் கொண்டு வந்து, மாணவர் விளைவுகளை மேம்படுத்துவதோடு, கற்பித்தல் மற்றும் நிர்வாகத்தையும் எளிதாக்குகிறது.
இதன் மூலம், ஆசிரியர்கள் தங்கள் நேரத்தை நிர்வாகப் பணிகளுக்கு குறைவாகவும், கற்பித்தல் பணிக்கு அதிகமாகவும் செலவிட வழிவகை செய்கிறது. AI கோர்ஸ் பில்டர் அம்சமானது, ஆசிரியர்களுக்கு எந்தவொரு பாடத்திட்டத்தையும் அல்லது
பாடத்தலைப்பையும் 30 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் ஒரு முழுமையான கட்டமைக்கப்பட்ட பாடமாக மாற்றுகிறது. இது வீடியோ பாடக் குறிப்புகள், வாசிப்புப் பொருட்கள், மதிப்பீட்டு அளவுகோல்களுடன் கூடிய ஒப்படைப்புகள் மற்றும்
தகவமைப்புப் பயிற்சித் தேர்வுகள் ஆகியவற்றைத் தானாகவே உருவாக்குகிறது. இதில் உள்ள ஒவ்வொரு அம்சமும் சம்மந்தப்பட்ட பாடநெறி மற்றும் திட்ட விளைவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. பாடம் நடத்தும் ஆசிரியர்கள், உள்ளடக்கப் பூட்டுதல்,
திட்டமிடப்பட்ட வெளியீடுகள், மற்றும் வீடியோவிலேயே குறிப்புகளைச் சேமித்தல் போன்ற அம்சங்களைப் பயன்படுத்தி பாடங்களை வழங்கலாம். மேலும், 1,00,000-க்கும் மேற்பட்ட முன்பே உருவாக்கப்பட்ட பாடத்திட்ட வார்ப்புருக்களின் (curriculum
templates) தொகுப்பையும் பயன்படுத்திக்கொள்ளலாம். பாடநெறி உருவாக்கம், மதிப்பீட்டு வடிவமைப்பு, மற்றும் விளைவுப் பொருத்தம் ஆகியவற்றைத் தானியக்கமாக்குவதன் மூலம், ஜோஹோ கிளாசஸ் 2.0 ஆசிரியர்களின் பணிச்சுமையைக்
கணிசமாகக் குறைக்கிறது. மேலும், மாணவர்கள் வகுப்பிற்கு வருவதற்கு முன்பே பாட உள்ளடக்கத்துடன் பரிச்சயப்படுத்தி, வகுப்பறை நேரத்தை கலந்துரையாடல், சிக்கல் தீர்த்தல், மற்றும் வழிகாட்டுதலுக்கு செலவிடும் flipped classroom எனும் முறையை சாத்தியமாக்குகிறது.
மாணவர்களுக்கு, இந்தத் தளம் கற்றல் அனுபவத்தை ஈடுபாடு மிக்கதாகவும், தனிப்பயனாக்கப்பட்டதாகவும், அவர்களின் சொந்த மொழியில் கிடைக்கக்கூடியதாகவும் உள்ளது. இதன் 24/7 AI ட்யூட்டர் அம்சமானது, ஒவ்வொரு மாணவருக்கும் அவரவர்
கற்றல் வேகத்தில் எந்நேரமும் உறுதுணையாக உள்ளது. அதே நேரத்தில், மாணவர்களுக்கு ஈடுபாட்டையும் அறிவுத் தக்கவைப்பையும் மேம்படுத்த, நுண்கற்றல், ஊடாடும் செயல்பாடுகள், மற்றும் விளையாட்டுமயமாக்கப்பட்ட அனுபவங்கள் ஆகியவை உதவுகிறது.
கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை, மாணவர் வாழ்நாள்சுழற்சி மேலாண்மை, சேர்க்கை முதல் படிப்பை முடிக்கும் வரை மாணவர்களைக் கண்காணித்து, கல்வியில் பின்தங்கும் அபாயத்தில் இருக்கும் மாணவர்களை AI மூலம் கண்டறிந்து சரியான
நேரத்தில் தலையிட்டு உதவ இந்தத் தளம் பயன்படுகிறது. நிறுவன நுண்ணறிவு (institutional intelligence), மாணவர் விளைவுகள், ஈடுபாடு மற்றும் செயல்பாட்டுத் திறன் குறித்த தகவல்களை வழங்குகிறது. அதே நேரத்தில், லோ-கோட் மைக்ரோ ஆப் பில்டர் அம்சமானது, சேர்க்கை, பாடத் திட்டமிடல், மற்றும் கல்வி நிர்வாகத்திற்கான தனிப்பயன் செயலிகளை மென்பொருள் பொறியியல் வளங்கள் இல்லாமலேயே உருவாக்க கல்வி நிறுவனங்களுக்கு உதவுகிறது.
இந்தியாவுக்காக உருவாக்கப்பட்டு, உலகமெங்கும் விரிவடையும் தளம்
ஜோஹோ, பள்ளிக்குச் செல்லாத மாணவர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், மற்றும் மாநில அளவிலான கல்வி வலையமைப்புகளுக்கான முயற்சிகள் மூலம் டிஜிட்டல் கல்வியை விரிவுபடுத்த, இந்தியா முழுவதும் உள்ள அரசு கல்வி அமைப்புகளுடன்
இணைந்து பணியாற்றி வருகிறது. ஜோஹோ கிளாசஸ் 2.0 தளமானது, ஒரு ஒருங்கிணைந்த இடைமுகம் மூலம் மையப்படுத்தப்பட்ட நிர்வாகம், உள்ளடக்க வழங்கல், மாணவர் ஈடுபாடு, மற்றும் அறிக்கையிடலை சாத்தியப்படுத்துகிறது. தனிப்பட்ட
வகுப்பறைகள் முதல் மாநிலம் தழுவிய கல்வி அமைப்புகள் வரையிலான பல்வேறு சூழல்களிலும் செயல்படுத்தக்கூடிய திறன் கொண்டது.
இந்தியாவின் பன்முக கல்வி சூழல் அமைப்பிற்காக உருவாக்கப்பட்ட ஜோஹோ கிளாசஸ் 2.0, 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளிலும் செயல்படக்கூடியது. இதன் மூலம், மாணவர்கள் தங்கள் சிந்தித்து கற்கும் மொழியிலேயே கற்பித்தல், மதிப்பீடு மற்றும் பாடத்திட்ட உள்ளடக்கத்தைப் பெற முடியும். இது மொழித் தடைகளை நீக்கி, முதல் தலைமுறை மற்றும் பிராந்திய மொழி மாணவர்களுக்கு தொழில்நுட்பம் மூலம் இயக்கப்படும் கல்வியை மேலும் அணுகக்கூடியதாக்குகிறது.
உயர்கல்வி நிறுவனங்களுக்கு, ஜோஹோ கிளாசஸ் 2.0, தானியங்கு பாடநெறி விளைவு (Course Outcome) மற்றும் திட்ட விளைவு (Programme Outcome) அடைவு கண்காணிப்பு மூலம் விளைவு சார்ந்த கல்வி மற்றும் அங்கீகாரத் தயார்நிலையை ஆதரிக்கிறது. இத்தளம் இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-இன் டிஜிட்டல் கற்றல், பன்மொழிக் கல்வி, மற்றும் விளைவு சார்ந்த கற்றல் நோக்கங்களையும் ஆதரிக்கிறது. அதே நேரத்தில், NAAC, NBA, UGC மற்றும் NMC போன்ற அங்கீகார கட்டமைப்புகளுக்கான அறிக்கையிடல் மற்றும் ஆவணப்படுத்தலை எளிதாக்குகிறது. மருத்துவ நிறுவனங்களுக்கு, இது தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) தேவைகளுக்கு ஏற்ப திறன்-அடிப்படையிலான மருத்துவக் கல்வி (CBME) பணிகளை ஆதரிக்கிறது. இதில் திறன் கண்காணிப்பு, மருத்துவப் பதிவேடு மேலாண்மை, OSPE மற்றும் OSCE மதிப்பீடுகள், மற்றும் தணிக்கைக்குத் தயாரான ஆவணப்படுத்தல் ஆகியவை அடங்கும்.
ஜோஹோவின் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட தொழில்நுட்ப அடுக்கில் கட்டமைக்கப்பட்ட இத்தளம், இந்தியாவில் தரவு இருப்பிடம் (data residency), இறையாண்மை பொருந்திய தரவு பாதுகாப்பு (sovereign data protection), மற்றும் இந்தியாவின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்திற்கு (DPDP Act) இணக்கம் ஆகியவற்றை ஆதரிக்கிறது.
Zoho Classes 2.0 அனைத்து நிறுவனங்களுக்கும் https://www.zoho.com/classes/ இல் உடனடியாகக் கிடைக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கான விலை விவரங்கள் இணையதளத்தில் உள்ளன.
Аналитика ИИ и парсинга
Технические детали обнаружения, сопоставления и связывания статьи
Поисковый запрос
«Zoho Classes 2.0 искусственный интеллект образование платформа»
Запрос, сгенерированный ИИ для поиска статьи в веб-источниках
Связанные результаты поиска
Результаты поиска отсутствуют в БД
Парсер не сохранил результаты веб-поиска для этой статьи.